கந்தளாயில் தடுப்பூசி ஏற்றும் பணிகள் ஆரம்பம்.

எப்.முபாரக்
திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வைத்தியசாலைகள் ஊடாக மருத்துவ சேவையாளர்கள் உள்ளிட்ட சுகாதாரத்து துறையினருக்கு கொவிட் 19 தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை இன்று(30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கோவிட் -19 நோய்த்தொற்று தடுப்பு நடவடிக்கையில் ஈடுபடும் மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரத் துறையினர்கள் 260 பேருக்கு கந்தளாய் தள வைத்தியசாலையில் தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கந்தளாய் தள வைத்தியசாலை பணிப்பாளர்,கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி,மற்றும் பொதுச் சுகாதார பரிசோதகர்கள், வைத்தியர்கள் தமக்கான கொவிட்19 தடுப்பூசி மருந்தை ஏற்றிக்கொண்டார்கள்.
இவ் தடுப்பூசி ஏற்றும் பணி நாளையும் நாளையும் நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.