மட்டக்களப்புராமகிருஷ்ணமிஷன்திருக்கோயில்மஹாகும்பாபிஷேகப்பெருவிழா

தசாப்தங்கள் கடந்து ஆன்மீகப்பணி, கல்விப்பணி, சமுதாயமேம்பாட்டுப் பணிகளைச்செய்வதில் மட்டக்களப்பு ராமகிருஷ்ண மிஷனின் வகிபங்கு மகத்தானது. சமகாலத்தில் மக்களிடையே புரையோடிப் போயிருக்கின்ற பிரச்சினைகளுக்கு ஆன்மீகமும் பக்திமாரக்கமும் தான் சிறந்த உபாயங்களாகின்றன. மாறிவரும் உலகின் இக்கட்டான காலகட்டங்களிலெல்லாம் சமுதாயத்தின் தேவையறிந்து சேவைசெய்யும் உன்னத நிறுவகமாக ராமகிருஷ்ணமிஷன் தன்னை நிலைநிறுத்திவிட்டது.

அந்த வெளிப்பாட்டிற்கான செயற்படுத்தல் பாதையில்
 மட்டக்களப்பு கல்லடி உப்போடையில் அமையப்பெற்றுள்ள ராமகிருஷ்ணமிஷன் திருக்கோயிலானது புதுப்பொலிவு பெற்று ஆன்மீக எழில் பொங்க மஹாகும்பாபிஷேகப் பெருவிழாவினைக் காணவிருக்கின்றது. தற்போதைய அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டு சுகாதார நடைமுறைகளிற்கு அமைவாக மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்களின் வரவோடு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 1ம்திகதி (திங்கட்கிழமை) சித்தயோகம் கூடிய சுபவேளையில் பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் திருக்கோயிலிற்கான கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.
காலை 6.00 மணிக்கு ஆரம்பமாகும் நிகழ்வுகள் கும்பாபிஷேகம் சிறப்பு யாகபூசை பஜனைப்பாடல்கள் விசேட ஆராதனை வழிபாடுகள் முதலியவற்றுடன் பக்தர் உள்ளங்களில் சங்கமிக்க இருக்கின்றன. நாட்டின் அசாதாரண சூழ்நிலை கருதிமட்டுப்படுத்தப்பட்ட  பக்தர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டுள்ளமையினால் ஏனைய பக்தர்கள் நிகழ்நிலை ஊடகங்கள் மூலமாக கும்பாபிஷேகத்தைக்கண்டு ஆன்மீக அனுபூதியினைப் பெற்றுக்கொள்ளலாம். திருக்கோயிலைத் நேரடியாக தரிசிக்க விரும்பும் பக்தர்கள் பிறிதொருநாளில் குடும்ப சகிதம் வருகைதருமாறு அறுவுறுத்தப்படுகிறார்கள்.
அனைத்துநிகழ்வுகளும்இலங்கைராமகிருஷ்ணமிஷன்கிளையின்தலைவர்ஸ்ரீமத்சுவாமிஅக்ஷராத்மானந்தஜீமஹராஜ் அவர்களின் தலைமையில் இடம்பெறும்.
பகவான் ஸ்ரீராமகிருஷணரின் கோயில் திருப்பணிக்காக மகத்தான சேவைகள் செய்தபக்தர்கள், நிதி நன்கொடையாளர்கள், பலஊர்களில் நன்கொடை ஏற்பாடுகளைச்செய்தவர்கள்அனைவருக்கும்பிறிதொருநாளில்சுவாமிகளால்அழைப்புவிடுக்கப்படும்என்பதும்குறிப்பிடத்தக்கது.