முல்லைத்தீவு மாவட்டத்தில் சுகாதார பிரிவினருக்கு கொரோன தடுப்பூசி ஏற்றும் பணி ஆரம்பம் !

சண்முகம் தவசீலன்

நாடளாவியரீதியில் இந்தியாவில் இருந்து தருவிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி முதற்கட்டமாக முப்படையினருக்கும்  சுகாதார பிரிவினருக்கும் ஏற்றும் பணிகள் தொடங்கிவைக்கப்பட்டுள்ளன.

இலங்கை அரசின் தீர்மானத்திற்கு அமைவாக 30.01.21 அன்று காலை முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தின் பிராந்திய சுகாதார பணிப்பாளர் பணிமனை எல்லைக்கு உட்பட்ட அனைத்து சுகாதார துறையினர் ஊழியர்கள் அனைவருக்கும் இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு செயற்படுத்தப்படவுள்ளது.

இதன் ஆரம்பமாக இன்று காலை முல்லைத்தீவில் உண்ணாப்புலவு வைத்தியசாலையில்  கொரோனா தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகள் இடம்பெற்றன

இதில் முதலாவதாக முல்லைத்தீவு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் மு.உமாசங்கர் அவர்களுக்கு தடுப்பூசி ஏற்றப்படத்தை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்ட  தொற்று நோய் தடுப்பு  பிரிவு வைத்திய பொறுப்பதிகாரி வி.விஜிதரன் அவர்களுக்கும் தொடர்ந்து ஏனைய வைத்தியர்கள் ஊழியர்களுக்கான தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கைகளும் இடம்பெற்றது