கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும் பணி அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது

கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட பிரதேசங்களில் கடமையாற்றும் வைத்தியர்கள்,தாதியர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட சுகாதார பிரிவில் கடமையாற்றும் அனைவருக்கும் கொவிட்-19 தடுப்பூசி ஏற்றும்; பணி இன்று ஆரம்பமானது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்கு உட்பட்ட அக்கரைப்பற்று,ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் கடமையாற்றும்  வைத்தியர்கள்,தாதியர்கள்,பொது சுகாதார பரிசோதகர்கள்,அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட சகல சுகாதார பிரிவு உத்தியோகத்தர்களுக்கும் கொவிட்-19 தடுப்பூசி (ஏற்றும்) வழங்கும் நிகழ்வு நண்பகல் அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டது.

இதில் அக்கரைப்பற்று சுகாதார வைத்திய அதிகாரிகாரியாலயம்,ஆலையடிவேம்பு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம், அக்கரைப்பற்று மாவட்ட வைத்தியசாலை ,அக்கரைப்பற்று ஆயுள்வேத மருந்து உற்பத்தி நிலையம் ,அக்கரைப்பற்று ஆலிம் நகர் ஆரம்ப பிரிவு வைத்தியசாலை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.