மகிழடித்தீவு வைத்தியசாலை ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றி வைப்பு.

(படுவான் பாலகன்)

மகிழடித்தீவு மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு கொரோனா தடுப்பூசி இன்று(30) சனிக்கிழமை ஏற்றப்பட்டது.

வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், பரிசாதகர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட 30பேருக்கு இத்தடுப்பூசி ஏற்றப்பட்டது.
மகிழடித்தீவு சுகாதார வைத்திய அதிகாரி கே.ரமேஸ் தலைமையில் இத்தடுப்பூசி ஏற்றப்பட்டமையுடன், முதலாவது தடுப்பூசி மகிழடித்தீவு வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி தி.தவனேசனுக்கு ஏற்றி வைத்தனர்.
இதன்போது, இத்தடுப்பூசி ஏற்றப்பட்டப்பின் நடந்துகொள்ள வேண்டிய விதம் தொடர்பிலும் விளக்கமளிக்கப்பட்டன.
இங்கிலாந்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்ட அஸ்ட்ராஜெனெகா கோவிஹெல்ட் கோவிட் தடுப்பூசி மும்பாயில் உள்ள சீரம் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளதுடன்,  இந்திய அரசாங்கத்தினால் இது வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.