கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில் தைப்பூச திருவிழா

தைப்பூச சிறப்பு பூசை வழிபாடுகள் வரலாற்று சிறப்புமிகு கொக்கட்டிச்சோலை ஸ்ரீ தான்தோன்றீஸ்வரர் ஆலயத்தில்  நேற்று(28) மாலை கிரியைகளுடன் ஆரம்பமாகி இன்று(29) அதிகாலை தீர்த்தோஸ்வத்துடன் நிறைவு பெற்றது.

நேற்று இரவு வசந்த மண்டப பூசையும்,  அதனை தொடர்ந்து சுவாமி உள்வீதி, வெளிவீதி வலம் வருதலும் நடைபெற்றன.

சிவஸ்ரீ மு. கு. சச்சிதானந்தக்குருக்கள் தலைமையில், சிவஸ்ரீ வ.சோதிலிங்ககுருக்கள் ஆகியோர் இணைந்து பூசை ஆராதனைகளை நிகழ்த்தினர்.

இத்தைப்பூச திருவிழாவிற்கான உபயத்தினை கலிங்ககுல மக்கள் வழங்கினர்.