குருந்தூர்மலைக்குச் சென்ற ஊடகவியலாளர்களின் விபரங்களைச் சேகரித்த பொலிசார்

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலையிலிருந்த தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அண்மையில் முல்லைத்தீவு  பொலிஸ்  நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு  அமைய அவ்வாறு முறைப்பாட்டில் குறிப்பிட்டதைப் போன்று வழிபாட்டு அடையாளங்கள் காணாமல் ஆக்கப்பட்டுள்ளதா என்பது தொடர்பில்  பார்வையிடுவதற்கு, முல்லைத்தீவு பொலிசார் முறைப்பாட்டாளர் ரவிகரனை 29.01.2021 இன்று குருந்தூர் மலைக்கு அழைத்துச்சென்றனர்.

இது தொடர்பில் செய்திசேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்களை மலைப்பகுதிக்குள் செல்வதற்கு பொலிசார் அனுமதி மறுத்ததுடன், அங்கு சென்ற ஊடகவியலாளர்களின் விபரங்களைச் சேகரித்து அச்சுறுத்தும் வகையில் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது