அக்கரைப்பற்றில் தைப்பூசத் திருவிழா

வி.சுகிர்தகுமார்

  தமிழர் திருவிழாவான தைப்பூசத் திருவிழா அறுபடைவீடுகளிலும் ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
அதே போல் இந்த ஆண்டும் அறுபடை வீடுகள் உள்ளிட்ட அனைத்து முருகன் கோவில்களிலும் கடந்த வாரம் கொடி ஏற்றத்துடன் தைப்பூசம் தொடங்கியது.
இதேநேரம் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு இலங்கையில் உள்ள முருகன் மற்றும் சிவன் விநாயகர் ஆலயங்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
அம்பாரை மாவட்டம் அக்கரைப்பற்று ஸ்ரீ வம்மியடிப்பிள்ளையார் ஆலயத்தில் இன்று இடம்பெற்ற பூஜை வழிபாடுகளில் மட்டுப்படுத்தப்பட்ட பக்தர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி கலந்திருந்தனர்.
பிள்ளையாருக்கான பூஜையினை தொடர்ந்து ஆலயத்தில் உள்ள முருகன் ஆலயத்தில் அபிசேக அலங்கார பூஜைகள் நடைபெற்றன.
ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ப.கு.கேதீஸ்வரக்குருக்கள் பூஜை வழிபாடுகளை நடாத்தி வைத்தார்.