கிண்ணியா-காக்கா முனைப்பகுதியில் 9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி

எப்.முபாரக்  
கிண்ணியா-காக்கா முனைப்பகுதியில் 9 மாத குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

திருகோணமலை நீதிமன்றத்தில் கடமையாற்றி வரும் நபர் ஒருவரின் குடும்பத்தினருக்கு இன்று (28)  பெறப்பட்ட அன்டிஜென் பரிசோதனை மூலம் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
கிண்ணியா பிரதேசத்தில் தொடர்ச்சியாக மக்களை தெழிவூட்டி   வருவதுடன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்தி வருவதாகவும் ஒவ்வொரு சங்கங்களின் ஊடாக தமது கிராமங்களை பாதுகாப்பது குறித்தும் அறிவுறுத்தல்களையும் அறிவூட்டல் களையும் வழங்கிவருவதாக குறிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி ஏ.எம். எம். அஜித் தெரிவித்தார்.