முல்லைத்தீவில் வலம்புரி சங்குடன் இருவர் கைது

சண்முகம் தவசீலன்

முல்லைத்தீவு செல்வபுரம் பகுதியில் இன்று காலை பெறுமதியான வலம்புரிச்சங்குடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்

வலம்புரிச்சங்கினை விற்பனைக்காகக் கொண்டு வந்த நிலையிலேயே வத்தளையினை சேர்ந்த இருவரை விசேட  அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்

கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட  விசேட  அதிரடிப்படையினர் சந்தேகநபர்களையும், வலம்புரி சங்கினையும் முல்லைத்தீவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்
\
குறித்த நபர்கள் நாளை முல்லைத்தீவு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக அறியமுடிகிறது

வலம்புரிச்சங்கு ஐந்து கோடி ரூபா  பெறுமதிக்கு விற்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளதாக  அறியமுடிகிறது