கிராம அபிவிருத்தி அதிகாரிகளுக்கான நியமனங்கள் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்_
பத்து கிராம அபிவிருத்தி  அதிகாரிகளுக்கான நியமனக் கடிதங்களை கிழக்கு மாகாண ஆளுநர்  அனுராதா யஹம்பத் அவர்களால் திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் வைத்து  இன்று (27) வழங்கி வைக்கப்பட்டன.
மாகாணத்தின் கிராம அபிவிருத்தி வளர்ச்சித் துறைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படும் இந்த அதிகாரிகள் கிழக்கு மாகாணத்தை உள்ளடக்கிய 10 பிரதேச செயலகங்களுக்கு நியமிக்கப்பட உள்ளனர்.