குருந்தூர் மலை நிலைமகள் தொடர்பில் ஆராய சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மலைக்கு செல்ல இராணுவம் தடை

சண்முகம்  தவசீலன்

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சாள்ஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் மற்றும் கரைச்சி பிரதேசசபைத் தவிசாளர் அ.வேளமாளிகிதன், பச்சிலைப்பள்ளிப் பிரதேசசபைத் தவிசாளர் சுப்பிரமணியம் சுரேன், பிரதேசசபை உறுப்பினர்களான சிலோகேஸ்வரன், த.றமேஷ், ச.ஜீவராசா உள்ளிட்ட குழுவினர் 27.01.2021 இன்றைய தினம் முல்லைத்தீவு – தண்ணிமுறிப்பு, குருந்தூர் மலை நிலவரங்கள் தொடர்பில் ஆராய்வதற்காகச் சென்றிருந்தனர்.

அப்போது அங்கு பாதுகாப்புக் கடமைகளில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் தமிழரசுக்கட்சி உறுப்பினர்களை குருந்தூர் மலைப் பகுதிக்குச் செல்லவிடாமல் தடுத்து நிறுத்தியிருந்தனர்