மட்டக்களப்பு நகரில் பாடசாலைக்குள் புகுந்த கொவிட் மாணவர்கள் தனிமைப்படுத்தலில்.

வேதாந்தி

மட்டக்களப்பு நகரில் உள்ள பிரபல பாடசாலையில் கல்விகற்கும் 10ம்ஆண்டு மாணவன் ஒருவருக்கு இன்று கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பிட்ட மாணவனுக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து மாணவன் கல்விபயின்ற வகுப்பில் அனைத்து மாணவர்களும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் குறிப்பிட்ட மாணவனுடன்  நேரடி தொடர்பு வைத்திருந்த மேலும் 08பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு நபரில் ஆயிரத்திற்குமேற்பட்ட பாடசாலையொன்றில் மாணவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

குறிப்பிட்ட தொற்றுடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 573ஆக அதிகரித்துள்ளது.இவர்களில் இன்னும் 160பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.