பாலமுனை வைத்தியசாலை விவகாரம் :  23ம் திகதி மீண்டும் நீதிமன்றுக்கு வருகிறது. 

நூருல் ஹுதா உமர்
 பாலமுனை கொவிட் தொற்றாளர்களுக்கு சிகிச்சையளிக்கும் வைத்தியசாலையின் நோயாளிகளது கழிவுகளால் நிலக்கீழ் நீர் மாசடைந்து பிரதேசத்தில் கொறோணா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனைத் தடுக்க மன்றின் கட்டளையைப் பெறுவதற்கு  அக்கரைப்பற்று நீதிவான் நீதிமன்றத்தில் கடந்த மாதம் வழக்குத்தாக்கல் ஒன்று செய்யப்பட்டிருந்தது.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதிபதி எம்.எச்.எம். ஹம்ஸா முன்னிலையில் நேற்று அழைக்கப்பட்ட  வழக்கில் இருசாராரின்கருத்துக்களை நீதிமன்றம்பரீசிலித்தது. சுகாதாரத்துறை தரப்பின் சார்பில் ஆஜரான கிழக்கு மாகாண சட்டத்தரணிகள் தமது பக்க வாதத்தை நீதிமன்றுக்கு எழுத்து மூலம் சமர்பித்திருந்த நிலையில் வழக்காளிகளுக்கு தமது பக்க வாதத்தை நீதிமன்றுக்கு அறிவிக்க பெப்ரவரி 09ம் திகதிவரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 23ம் திகதி கட்டளை பிறப்பிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.