கல்முனைப்பிராந்தியத்தில் மேலும் ஒரு கொவிட் மரணம்.கிழக்கில் 14ஆக அதிகரிப்பு.

வேதாந்தி

கிழக்கு மாகாணத்தில் கொவிட் தொற்றினால் மேலும் ஒரு மரணம் பதிவாகியுள்ளது.கல்முனை சாய்ந்தமருது சுகாதாரப்பிரிவிலேயே இவ்மரணம் ஏற்பட்டுள்ளதாக மாகாணசுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் அழகையா லதாகரன் தெரிவித்தார்.

மரணமடைந்தவரின் சடலம் தற்போது கல்முனை ஆதாரவைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து  கல்முனைப்பிராந்தியத்தில்  மரணித்தவர்களின் எண்ணிக்கை 07ஆக அதிகரித்துள்ளது.கிழக்குமாகாணத்தில் மரணித்தவர்களின் எண்ணிக்கை 14ஆக அதிகரித்துள்ளதாக மாகாணப்பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கல்முனை பிராந்திய சுகாதாரப்பணிமனையின் அறிக்கையின்படி நேற்று பிரதேசத்தில் 16பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும், மொத்தமாக பிராந்தியத்தில் இதுவரை 1153பேர் தொற்றுக்குள்ளாகியபோதிலும் 948பேர் குணமடைந்து வழமைநிலைக்கு திரும்பியுள்ளதுடன் 205பேர் தொடர்ந்தும் சிகிச்சைபெற்றுவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.