பிரதமரின் மகனும் இரா.சாணக்கியனும் முக்கிய கலந்துரையாடல்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின்பிரதம அலுவலக பிரதானியான யோஷித ராஜபக்‌ஷ  தமிழ் தேசிய கூட்டமைப்பு  நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் மகனும்பிரதம அலுவலக பிரதானியான யோஷிதா ராஜபக்ஷ, பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனுடன் பரவலான கலந்துரையாடல்களை நடத்தியதாக ட்வீட் செய்துள்ளார்.

இந்த பேச்சுவார்த்தைகளில் வடக்கு மக்கள் மற்றும் அவர்களின் வாழ்வாதாரங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

“வடகிழக்கு ஒத்துழைப்பு மற்றும் சமூக-பொருளாதார முயற்சிகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகளைப் பார்த்தேன்” என்று யோஷிதா ராஜபக்ஷ ட்வீட் செய்துள்ளார்.

வட கிழக்கு மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பிரதம அலுவலக பிரதானியான யோஷித ராஜபக்‌ஷவுடன் இன்றைய தினம் கலந்துரையாடினேன் என  பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியனும் ட்வீட் செய்துள்ளார்