கொவிட் 19 இலங்கையில் 653 இன்று குணமடைந்து வீடுதிரும்பினர்.

Corona virus test kit - Swab sample for PCR DNA testing

கொவிட் -19 வைரஸால் பாதிக்கப்பட்ட மொத்தம் 653 பேர் இன்று முழுமையாக குணமடைந்து சிகிச்சை மையங்களை விட்டு வெளியேறியுள்ளனர்.

அதன்படி, நாட்டில் கொவிட் நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50337 ஆகும்.

நாட்டில் கொவிட் தொற்று நோயாளிகளின் மொத்த எண்ணிக்கை 58430 ஆகும்.

இவர்களில் 7810 நோயாளிகள் இன்னும் சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் கோவிட் -19 வைரஸ் தொற்று காரணமாக இறப்பவர்களின் எண்ணிக்கை 283 ஆகும்.