முல்லைத்தீவு,கிளிநொச்சி மாவட்டத்தில் 104 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிய விதையனைத்தும் விருட்சமே குழுவினர்

சண்முகம் தவசீலன்

கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய், மாந்தை கிழக்கு,ஒட்டுசுட்டான் ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளிலும் கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலக பிரிவிலும் தெரிவு செய்யப்பட்ட 104 பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் இன்று(23) வழங்கி வைக்கப்பட்டது

கருகம்பனை இந்து இளைஞர் கழகமும் சித்திரமேழி பழனியானந்தன் சனசமூக நிலையமும் இணைந்து முன்னெடுக்கும் விதையனைத்தும் விருட்சமே செயற்திட்டமானது வடக்கு கிழக்கில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை மேம்படுத்தும் நோக்கில் வருடம் தோறும் அதிஸ்ரலாப சீட்டிழுப்புக்களை நடத்தி அதில் வரும் பணத்தில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் செயற்றிட்டத்தை முன்னெடுத்து வருகிறது

அந்தவகையில் 2020 ம் ஆண்டு முன்னெடுக்கப்பட்ட அதிஸ்ரலாப  சீட்டிழுப்பின்  ஊடாக சேர்க்கப்பட்ட பணத்தைக் கொண்டு இம்முறையும் யாழ்ப்பாணம் மன்னார் முல்லைத்தீவு கிளிநொச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில்  1000 மாணவர்களை இலக்காக கொண்டு ஒரு மாணவருக்கு தலா 2000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கும் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

அந்தவகையில் முதல் கட்டமாக மன்னார் மாவட்டத்தில் 96 மாணவர்களுக்கும் இரண்டாம் கட்டமாக கிளிநொச்சி  மாவட்டத்தில் 103 மாணவர்களுக்கும் கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றதனை தொடர்ந்து இன்று முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் மூன்றாம் கட்டமாக 104 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது

அந்தவகையில் முல்லைத்தீவு  மாணவர்களின்  விசேட கோரிக்கைக்கு அமைவாக  துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில்  20 மாணவர்களுக்கும்  மாந்தை கிழக்கு பிரதேச செயலகப் பிரிவில் 15 மாணவர்களுக்கும் ஒட்டுசுட்டான் பிரதேச செயலகப் பிரிவில்  37  மாணவர்களுக்குமாக 72 மாணவர்களுக்கு புத்தகப்பை கற்றல் உபகரணங்கள் காலணிகள் உள்ளடங்கலாக ஒரு மாணவருக்கு தலா 3500 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு   கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட  32 மாணவர்களுக்கு தலா 2000 ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது

முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் பிரதேச செயலகப் பிரிவில்  20 மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு காலை 9.30 மணிக்கு துணுக்காய்  பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது இதில் துணுக்காய் பிரதேச செயலாளர் திருமதி ஆ.லதுமீரா  துணுக்காய்  பிரதேச இளைஞர் சேவை அதிகாரி ஜெ.முகிலன் துணுக்காய் பிரதேச செயலக ஊழியர்கள் விதையனைத்தும் விருட்சமே உறுப்பினர்கள் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்

தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு  பிரதேச செயலகப் பிரிவில்  15 மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு காலை 11.00 மணிக்கு மாந்தை கிழக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது இதில் மாந்தை கிழக்கு  பிரதேச செயலக ஊழியர்கள் மாந்தை கிழக்கு  பிரதேச இளைஞர் சேவை அதிகாரி இ.கஜிந்தன்  மாந்தை கிழக்கு பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள் விதையனைத்தும் விருட்சமே உறுப்பினர்கள் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்

தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான்  பிரதேச செயலகப் பிரிவில்  37 மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு மாலை 2.30 மணிக்கு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது இதில் ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் த.அகிலன் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக பதிவாளர்   ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் சேவை அதிகாரி த.இரதீசன் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் ஒட்டுசுட்டான் பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள் விதையனைத்தும் விருட்சமே உறுப்பினர்கள் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தனர்

தொடர்ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலக பிரிவில் தெரிவுசெய்யப்பட்ட  32 மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் வழங்கும் நிகழ்வு மாலை 5.00 மணிக்கு பூநகரி பள்ளிக்குடா பொதுநோக்கு மண்டபத்தில் இடம்பெற்றது இதில் பூநகரி  பிரதேச இளைஞர் சேவை அதிகாரி அ.ஜெயாளன் பச்சிலைப்பள்ளி பிரதேச இளைஞர் சேவை அதிகாரி செ.சுஜிதரன்   பூநகரி பிரதேச இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் பூநகரி  பிரதேச இளைஞர் கழக சம்மேளன உறுப்பினர்கள் விதையனைத்தும் விருட்சமே உறுப்பினர்கள் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது