(ஏ.எல்.எம்.ஷினாஸ்)
என்னைப் போன்றே கற்பதற்கு டுயிவழி இல்லாத மாணவர்களுக்கு Laptops கொடு ப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் என இலட்சாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள சுக்ரா முனவ்வர் தெரிவித்தார்.
சிரச ஊடக வலையமைப்பின் இலட்சாதிபதி நிகழ்வில் கலந்து கொண்டு சகோதர சிங்கள மொழியில் திறமையை வெளிப்படுத்தி இலட்சாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட முஸ்லிம் மாணவி சுக்ரா முனவ்வரை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று (24) அவர் கல்விகற்ற காலி சுதர்மா மகா வித்தியாலயத்தில் சிரச ஊடக நிறுவனத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. பாராட்டு விழாவில் மாணவி சுக்ராவின் உரை பலரது பாராட்டையும் பெற்றிருந்தது.
இந்த மாணவியின் கல்வி, பேச்சாற்றல், பொதுஅறிவு என்பவற்றால் பேரின சமூகமே வாழ்த்தி வரவேற்கும் நிலையில் தான் கல்விகற்ற பாடசாலை சமூகத்தினால் சுக்றா வரவேற்கப்பட்டதுடன், பாராட்டு நிகழ்வில் உரையாற்றிய சுக்ரா, எனக்கு நான்கு ஐந்து Laptops கள் கிடைத்துள்ளன. ஏற்கனவே இரண்டு Laptops கள் கிடைத்துவிட்டன. அவை போதும் எனக்கு. இன்று கிடைத்துள்ள இந்த Laptops அனைத்தையும் என்னைப் போன்றே கற்பதற்கு Laptops இல்லாத மாணவர்களுக்கு கொடுப்பதற்கு ஏற்பாடு செய்யுங்கள் எனவும் கூறினார்.
சிரச ஊடக வலையமைப்பினரால் 20 இலட்சம் ரூபா காசோலை உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டதுடன் Laptop s மற்றும் பரிசுகள் பலவும் வந்து குவிந்தன சுக்ராவுக்கு இந்த மகிழ்சிகரமான நிகழ்வில் சுக்ராவின் பெற்றோர்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
சிரச ஊடக வலையமைப்பினரால் 20 இலட்சம் ரூபா காசோலை உத்தியோகபூர்வமாக வழங்கிவைக்கப்பட்டதுடன் Laptop
இலங்கையின் தெற்கில் காலி கட்டுகோடாவில் உள்ள ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த 17 வயதான சுக்ரா முனாவ்வர் சிராசா டிவியின் லட்சபதி நிகழ்சியில்; சனிக்கிழமை (23) கலந்து கொண்டு 20 இலட்சம் ரூபாவை வெற்றிபெற்றார்.
நிகழ்ச்சியின் தொகுப்பாளரான சந்தனா சூரியபந்தரா எழுப்பிய கேள்விகளுக்கு வெற்றிகரமாக பதிலளித்ததன் மூலம் சுக்ரா இந்த பரிசைப் பெற்றார்.இதற்கு முன்னர் வெற்றியாளர்கள்:
நிகழ்ச்சியின் தொகுப்பாளரான சந்தனா சூரியபந்தரா எழுப்பிய கேள்விகளுக்கு வெற்றிகரமாக பதிலளித்ததன் மூலம் சுக்ரா இந்த பரிசைப் பெற்றார்.இதற்கு முன்னர் வெற்றியாளர்கள்:
2014 – அபேக்ஷா குமாரி
2015 – மோட்சே மதுசங்கா
2019 – ஹன்சினி கவிந்தி ஆகியோர் இதற்கு முன்னர்