திருமலையில் ஒரேவீதியில் 17 பேருக்கு கொவிட் தொற்று.வீதியும் முடக்கம்.

பொன்ஆனந்தம்

திருகோணமலை பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் உள்ள டைக்வீதியில் 17பேர் தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக பிரதேச வைத்தியஅதிகாரி டாக்டர் எஸ்.சையொளிபவான் தெரிவித்தார்.

திருமலை நீதிமன்றத்தில் பணிபுரியும்  தொற்று ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து குறிப்பிட்டவீதியில்25பேருக்கு மேற்கொண்ட அன்டிஜென் பரிசோதனையின் போது இவர்கள் இனம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட் தொற்றாளர்கள் பலசிறுவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து டைக்வீதியில் உள்ள மக்கள் வெளிச்செல்ல  கட்டுப்பாடுவிதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் பாலையூற்று பூம்புகார் கிராமம் தொடர்ந்து அவதான நிலையில் இருப்பதுடன், பரிசோதனைகளும் தொடர்கிறது எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை திருமலை மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை 404ஆக அதிகரித்துள்ளது.இதில் ஆகக்கூடுதலாக திருகோணமலையில் 169, கிண்ணியா 86 ,மூதூர் 57 என்பனவே கூடுதல் தொற்றாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.