மட்டக்களப்பில் மேலும் ஒரு கொவிட் மரணம்.கிராமசேவையாளருக்கும் தொற்று.

வேதாந்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் மேலும் ஒரு கொவிட் மரணம் தற்போது பதிவாகியுள்ளதாக பிராந்திய சுகாதாரசேவைகள்பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

மரணமடைந்தவர் அண்மையில் மட்டக்களப்பு அரசடிகிராமசேவையாளர் பிரிவில் கொவிட் தொற்றுகாரணமாக மரணமடைந்தவரின் மனைவி என தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பிட்ட நபருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து காத்தான்குடி ஆதாரவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வந்தநிலையிலேயே இன்று மரணமடைந்துள்ளார்.

தற்போது மாவட்டத்தில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை06ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை பட்டிப்பளைபிரதேசசெயலாளர் பிரிவில் கடமையாற்றும் கிராம சேவையாளர் ஒருவரும்  இன்று தொற்றுக்குள்ளாகியுள்ளார். இதுவரை மாவட்டத்தில் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 530 என தெரிவிக்கப்படுகின்றது.இதில் தற்போது 196பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மட்டுபோதனா வைத்தியசாலை ஊழியர்கள்28பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளதுடன் தொடர்ந்தும் 27 ஊழியர்கள் சிகிச்சைபெற்றுவருவதாகவும் மட்டக்களப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொற்றுக்குள்ளான முப்படைகளின் எண்ணிக்கை 15ஆக அதிகரித்துள்ளது.இவர்கள்அனைவரும் தற்போது சிகிச்சைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.