நுண்ணுயிரியலாளர் டாக்டர் முடித அபேகொன்
கொவிட் இலங்கையில் சமூகமயமாக்கப்பட்டதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். நோயாளிகள் எங்கிருந்து வந்தார்கள் என்பதைக் கண்டுபிடிக்க முடியாத வகையில் காணப்படுகிறார்கள். அதாவது வைரஸ் சமூகமயமாக்கப்பட்டுள்ளது. அதுதான் உண்மை. அதைச் சொல்ல நாம் பயப்படக்கூடாது இவ்வாறு கேகாலை மருத்துவமனையின் நுண்ணுயிரியலாளர் டாக்டர் முடித அபேகொன் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் இந்தியா போன்ற வளர்ந்த நாடுகளில் கொவிட் சமூகமயமாக்கப்பட்டுள்ளது. இலங்கை போன்ற வளரும் நாடு சமூகமயமாக்கப்பட்டுள்ளது என்று சொல்வதற்கு வெட்கப்படக்கூடாது. ஏனெனில் உலகின் வளர்ந்த நாடுகளால் கூட இதைக் கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிவித்துள்ளார்.