தங்கள் மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்த உரிமை உண்டு.அமெரிக்கா.

1955 ஆம் ஆண்டில் இலங்கையினால் அங்கீகரிக்கப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் உலக மனித உரிமைகள் பிரகடனத்தின் 18 வது சரத்தின்படி ஒவ்வொருவருக்கும் கற்பித்தல், பயிற்சி, வழிபாடு, மற்றும் அனுசரிப்பு ஆகியவற்றில் தங்கள் மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்த உரிமை உண்டுஎன இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸின் தெரிவித்துள்ளார்.

நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.இவ்அறிக்கை ருவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சர்வதேச பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி கொரோனாவால் இறந்தவர்களது சமூகங்கள் தங்களது நம்பிக்கையை கடைபிடிக்க அனுமதிப்பதன் மூலம் அவர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் மதிக்கப்பட வேண்டும்

கோவிட்19 தொற்று நோய் உலகளாவிய சவால்களை உருவாக்கியது. ஆனால் இதன்மூலம் ஒருவருக்கொருவர் நம்புவதற்கான இரக்கத்தையும் மரியாதையையும் இழக்கக்கூடாது.

இந்த தொற்றுநோயால் அன்புக்குரியவர்களை இழந்த அனைத்து குடும்பங்களுடனும் நாங்கள் நிற்கிறோம். சர்வதேச பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி அவர்களின் நம்பிக்கையை கடைபிடிக்க அனுமதிப்பதன் மூலம் அவர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் மதிக்கப்பட வேண்டும் எனவும் இலங்கை மற்றும் மாலைதீவுக்கான அமெரிக்க தூதுவர் அலைனா பி. டெப்லிட்ஸின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது