தனிமைப்படுத்த காத்தான்குடி 10 கிராம சேவையாளர் பிரிவுகளில் 14 இராணுவ சோதனை நிலையங்கள்

ரீ.எல்.ஜவ்பர்கான்
தனிமைப்படுத்தபட்டுள்ள காத்தான்குடி பிரதேச செயலகப்பிரிவின் 10 கிராம சேவையாளர் பிரிவுகளிலும் 14 இராணுவ சோதனை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்தனர்.

குறித்த பிரதேசத்தில் விடுக்கப்பட்டுள்ள 8 கிராம சேவையாளர் பிரிவுகள் நீங்கலாக மீண்டும் அமுலுக்குவரும் கிராம சேலையாளர் பிரிவுகளை அடையாளப்படுத்தி அதன் வீதிகளை மூடும் பணிகள் இன்று காலை இராணுவம் பொலிஸ் நகரசபை பிரதேச செயலகம் சுகாதார வைத்தியதிகாரி பணிமனை ஆகியவற்றின் அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டன.
ஊள்வீதிகள் முக்கிய சந்திகள் மக்கள் நடமாடக் கூடிய இடங்கள் என்பன நகர சபை ஊழியர்களால்  மூடப்பட்டன.
பிரதேச செயலாளர் யு.உதயசிறீதர் நகரசபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொறுப்பதிகாரி கயான் ராஜகருணா சுகாதார வைத்தியதிகாரி டாக்டர் ஏ.எல்.எம்.நபீல் உட்பட இராணுவ உயர் அதிகாரிகளும்கலந்து கொண்டனர்.