மட்டு—கல்முனை பிரதான வீதியில் இரு தனியார் பஸ்கள் ஒன்றுடன் மோதி பாரிய சேதம்–அரச கட்டிடத்திறகும் பாரிய பாதிப்பு

ரீ.எல்.ஜவ்பர்கான்–
மட்டக்களப்பு-கல்முனை பிரதான வீதியில் ஆரையம்பதியில் இரணடு ;தனியார் பஸ்வண்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் இரு பஸ்களுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் அரசாங்க கட்டிடமொன்றிற்கும் பலத்த  சேதம் ஏற்பட்டுளளது.

இன்று (18) காலை 7 மணியளவில் கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ் வண்டி ஆரையம்கதி கமநல சேவைகள் திணைக்கள  அலுவலகத்திற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனியார் பஸ் வண்டிமீது பின் பக்கமாக மோதியதில் இரு பஸ் வண்டிகளுக்கும் பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதுடன் கமநல சேவைகள் திணைக்கள அலுவலத்தின் மதில்மற்றும் பிரதான கதவுகள் உடைந்து நொறுங்கி சேதமடைந்துள்ளன.
பின்னால் வேகமாக வந்த பஸ்வண்டி வேறொரு வேனை முந்திச் செல் முற்பட்போதே நிறுத்தியிருந்த பஸ்வண்டிமீது மோதியதால்  அந்த பஸவண்டி ; அலுவலக கட்டிட மதிலில் மோதியுள்ளது.அதன்போதே ; அக்கட்டிடத்திற்கு சேதமேற்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.