தனிமைப்படுத்தப்பட்டு முடக்கப்பட்ட பகுதிக்கு ஒரு தொகை சுகாதார பொருட்கள் RDC அமைப்பால் வழங்கி வைப்பு

ஹஸ்பர் ஏ ஹலீம்_
கிண்ணியாவில் தனிமைப்படுத்தப்பட்ட இடங்களுக்கு நேற்று (16)கிராம அபிவிருத்தி பணி RDC அமைப்பின் மூலம் பாதிக்கப்பட்ட மக்களுக்காக பெண்களுக்கு அத்தியாவசிய தேவையான சுகாதார  முறைபயன் பாட்டு  பொருட்கள் வழங்கப்பட்டது.

குறித்த பொருட்களை RDC அமைப்பின் தலைவர் ஆர்.எம்.ராபில் அவர்கள் கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.ஹனி அவர்களிடம் கையளித்தார். கிண்ணியாவில் உள்ள மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவு கொவிட்19 தொற்று காரணமாக முடக்கப்பட்டுள்ளது. இதனை கருத்திற் கொண்டு உரிய பொருட்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.