மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் முதலாவது கொவிட் மரணம்.

மட்டக்களப்பு நகரில் முதலாவது கொவிட் மரணம் பதிவாகியுள்ளது.79வயதுடைய நபரொருவர் வீட்டிலிருந்தவாரே மரணமடைந்துள்ளார்.இவருடைய மரணத்துக்கான காரணம் கொவிட் தொற்று  என பரிசோதனைமூலம் கண்டறியப்பட்டுள்ளதாக பிராந்திய சுகாதாரப்பணிப்பாளர் டாக்டர் நாகலிங்கம் மயூரன் தெரிவித்தார்.

குறித்த இறப்புச்சம்பவம் மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட அரசடி கிராமசேவையாளர் பிரிவில் இடம் பெற்றுள்ளது.

தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் கொவிட் தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை 05ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 24மணிநேரத்தில்15பேர் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

இதில் ஏறாவூர் பிரதேசத்தில் 10பேரும் ,காத்தான்குடியில் 04பேரும். மட்டக்களப்பில் ஒருவரும் என தெரிவிக்கப்படுகின்றது.