எப்.முபாரக்
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகப் பிரிவில் நேற்று (12) 133 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனயும் 170 பேருக்கு அன்டிஜென் பரிசோதனையும் செய்திருப்பதாக கிண்ணியா பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எம்.எச்.எம்.றிஸ்வி தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கருத்து தெரிவிக்கும் போது இந்தப் பரிசோதனை தனிமைப்படுத்தப்பட்ட மாஞ்சோலை கிராம சேவகர் பிரிவில் தொற்றாளர்களாக இனங்காணப்பட்டவர்களின் முதன் நிலை தொடர்பாளர்களுக்கு செய்யப்பட்டது என்றும் அன்டிஜன் பரிசோதனையில் எவருக்கும் தொற்று இனங்காணப்படவில்லை என்றும் தெரிவித்த அவர் PCR பரிசோதனைக்காக 133 நபர்களின் இரத்த மாதிரிகளும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாைலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்