மாகாண சபை தேர்தல் இல்லை. அமைச்சர்உதய கம்மன்பில

மாகாண சபை தேர்தல்கள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும்.தேர்தல் ஆணைக்குழு.

நாட்டில் கொரோனா வைரஸ் நிலைமை மேம்படும் வரை மாகாண சபை  தேர்தல் நடத்தப்படாது எனஅமைச்சரவை இணைப்பேச்சாளர்  அமைச்சர்உதய கம்மன்பில தெரிவித்தார்.

அவர்மேலும் தெரிவிக்கையில், ஆளும் கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் நாட்டின் சுகாதார நிலைமைகளின் அடிப்படையில் மாகாணசபைத் தேர்தலை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளனர்.

நிலைமை மேம்பட்டதும் அரசாங்கம் இந்த விஷயத்தை மறுஆய்வு செய்து முடிவு செய்யும் என்று அவர் மேலும் தெரிவித்தார்..

இதேவேளை மாகாண சபை தேர்தல்கள் கட்டாயம் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருப்பதாக தேசிய தேர்தல் ஆணையம் இன்று தெரிவித்துள்ளது.

ஆணைக்குழுவின் தலைவர் நிமல் பஞ்சிஹேவா, மாகாண சபைகள் அரசியலமைப்பின் ஒரு பகுதியாக இருப்பதால் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்

எனவே, மக்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுப்பதற்காக தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் ஆணைக்குழு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.