ஒலுவில் பொது நூலகத்தில் நூலக சேவகராக கடமையாற்றிய எம்.வை.எம்.நயிம் சேவையிலிருந்து ஓய்வு

பைஷல் இஸ்மாயில்
ஒலுவில் பொது நூலகத்தில் நூலக சேவகராக கடமையாற்றிய எம்.வை.எம்.நயிம் 60 வயதைப் பூர்த்தி செய்து கொண்டு நேற்றைய தினம் (11) சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.
அவரின் ஓய்வு தினத்தையொட்டிஒலுவில் பொது நூலகத்தில் சேவைநலன் பாராட்டும் நிகழ்வுஅட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லாவின் ஆலோசனைக்கு அமைவாக நூலகர் ஏ.எல்.எம்.முஸ்தாக் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வி்ல் அட்டாளைச்சேனை பிரதேச சபையின் செயலாளர் எம்.ஐ.எம்.பாயிஸினால் பொன்னாடை போற்றி கௌரவிக்கப்பட்டதுடன், அவரது நேர்த்தியான சேவை, நேரம் தவறாத கடமை உணர்வு, பணிவு, விசுவாசம், நம்பிக்கை போன்ற அவரின் நற்செயல் பற்றி எல்லோரினாலும் பாராட்டப்பட்டார்.
இதில் நிதி உதவியாளர் எஸ்.எம்.ஹூஸ்ரி, பிரதம முகாமைத்துவ உதவியாளர் எம்.ஏ.அபுசாலிஹூ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.