நிந்தவூரில் நோயாளிகளின் சிரமம் தவிர்க்க சக்கரநாற்காலிகள் வழங்கி வைப்பு

(யாக்கூப் பஹாத்,நக்கீர் நாவஸ்)
நிந்தவூர் ஆதார வைத்தியசாலையின் பாவனைக்கு தேவையான சக்கர நாற்காலிகள் (Wheelchairs) பழுதடைந்திருந்த நிலைமையை அவதானித்து அதனை ஒரு நலன்விரும்பி (Maksooth Ahamad) முகநூல் வாயிலாக  அறிந்த  நிந்தவூர் நலன்புரிச் சபையின் (NWC)  உறுப்பினர்களுள் ஒருவரான  பரோபகாரி ஒருவரின் உதவியைக் கொண்டு மேலும் சில நோயாளர் விடுதிகளில் உள்ள நோயாளர்களுக்கும் பலன் தரக்கூடிய வகையில் ஒன்பது (9) சக்கர நாற்காலி தள்ளுவண்டிகளை  நிந்தவூர் ஆதார வைத்தியசாலைக்கு அன்பளிப்பு செய்திருக்கின்றது.  இன்று (11. 01.2021 ) திங்கட்கிழமை காலை 11.00 மணியளவில்  நிந்தவூர் வைத்தியசாலையின் கேட்போர் கூடத்தில் NWC யின் உயர் பீட உத்தியோகத்தர்களால் ஒன்பது நாற்காலிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் NWC யின் தலைவர்  ஓய்வுபெற்ற மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளர் அல் ஹாஜ். எம.எச்.யாகூப் ஹஸன் அவர்கள், சிரேஷ்ட ஆலோசகர் ஓய்வுபெற்ற விரிவுரையாளர் அல்ஹாஜ். நசீர் அஹமது அவர்கள், நிந்தவூர் வைத்தியசாலையின் சிரேஷ்ட தாதி உத்தியோகத்தரும் NWC பொதுத்திட்ட முகாமையாளருமான எம்.ஐ.உமர் அலி அவர்கள், அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி விரிவுரையாளர் மேலதிகச் செயலாளர் எம்.ஐ.எம். ஹுசைன் அவர்கள் ஆகியோரும் வைத்தியசாலையின் பொறுப்பாளர் டாக்டர் ஷகீலா இஸ்ஸதீன் மற்றும் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதியர்கள் என பலரும் பங்கு கொண்டனர். ஒன்பது சக்கர நாற்காலிகளுக்குமாக மொத்தம் ரூபா 111,150 பயன்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.