முல்லைத்தீவில் பலர் தனிமைப்படுத்தல் பலரிடம் பிசிஆர் பரிசோதனைகள்

சண்முகம் தவசீலன்
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரு கொரோனா தொற்றாளர் நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்ட நிலையில் அவருடன் தொடர்பை பேணிய  முப்பது பேர்களுக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதோடு இன்று மாலை சுமார் 25 பேரிடம் பி சி ஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டு உள்ளன

முல்லைத்தீவு மாவட்டத்தின் வண்ணாங்குளம் கிராமத்தில் வசிக்கின்ற நபர் ஒருவர் தன்னுடைய உறவினர் வீட்டிற்கு வவுனியாவுக்கு சென்று வந்துள்ள நிலையில் வவுனியாவில் உள்ள அவருடைய உறவினருக்கு  கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் குறித்த நபர்  முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டு அங்கு பி சிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று மாலை வெளியான பி சி ஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையில் குறித்த நபருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது
இந்நிலையில் குறித்த நபருடன் தொடர்பில் இருந்த நபர்களை அடையாளப்படுத்தி தனிமைப்படுத்தி கின்ற நடவடிக்கைகளை முல்லைத்தீவு  பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி தலைமையிலான குழுவினர் நேற்று மாலை முதல் இரவிரவாக முன்னெடுத்திருந்தனர்
இந்நிலையில் குறித்த நபருடன் தொடர்புகளை பேணிய சுமார் 30 பேருக்கு மேல் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதோடு இன்று மாலை  சுமார் 25 பேருக்கான பி சி ஆர் பரிசோதனைகளும் முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது