பொத்துவில் பிரதேசத்தில் பீ.சீ.ஆர்.மற்றும் அன்ரிஜன் பரிசோதனை சம்மந்தமானவிழிப்புணர்வு

இஸ்ஸதீன்.ஏ.ஸிறாஜ் )

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்ட சம்மேளனத்தின் ஏற்பாட்டில் கொரோனா தொற்றுடையோருக்கு  மேற்கொள்ளப்படும்  பீ.சீ.ஆர்.மற்றும் அன்ரிஜன் பரிசோதனை சம்மந்தமான விழிப்புணர்வு செயலமர்வு மற்றும் முன்னணியினால் வெளியீடு செய்யப்பட்ட 2021 புதிய ஆண்டுக்கான நாட் காடடி மற்றும் நாட் குறிப்பேடு வெளியீட்டு வழங்கி வைக்கும் நிகழ்வுஇன்று  (10) பொத்துவிலில் இடம்பெற்றது.
அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் அம்பாறை மாவட்டத் தலைவரும் ஓய்வுபெற்ற  கிராம உத்தியோகத்தருமான எம்.எம்.அஜ்வத் தலைமையில் நடைபெற்ற  இந்நிகழ்வில் முன்னணியின் முன்னாள் தேசியத் தவைர் எம்.ஐ.உதுமாலெவ்வை , பொத்துவில் பிரதேச  சிரேஸ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம்.ஏ மலிக் , முன்னணியின் பொத்துவில் பிரதேச தலைவர் .ஏ.மாபிர்  உட்பட முன்னணியின் மாவட்ட நிருவாக உறுப்பினர்கள் என பலர் கலந்து கொண்டனர்
இதன் போது கொவிட் 19 தொற்றாளர்களுக்கு மேற்கொள்ளப்படும்  பீ.சீ.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனை தொடர்பான விளக்கமளிக்கப்பட்டதுடன்  2021 புதிய ஆண்டுக்கான நாட் காடடி மற்றும் நாட் குறிப்பேடு அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.
கொவிட் 19 தொற்றாளர்களுக்கு மேற்கொள்ளப்படும்  பீ.சீ.ஆர் மற்றும் அன்ரிஜன் பரிசோதனை தொடர்பாக பொது மக்கள் மத்தியில் ஒரு வகையான அச்ச சூழ் நிலை காணப்படுகின்றது.இதனை நிவர்த்திக்கும் முகமாக. அம்பாறை மாவட்ட சம்மேளனத்தினால் இந்த விழிப்புணர்வு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டு முதல் கட்டமாக பொத்துவிலில் இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கதாகும்.