யாழில் சிதைந்தது தமிழர்களின் அடையாளம்.சட்டவிரோதமான கட்டடம் அகற்றிவிட்டோம். உபவேந்தர்.

யாழ்பல்கலைக்கழகத்தில்  நிறுவப்பட்டிருந்த தமிழர்களின் அடையாளங்களில் ஒன்றான முள்ளிவாயக்கால் நினைவுத்தூபி யாழ் பல்கலைக்கழக நிறுவனத்தினால் இடித்து சிதைக்கப்பட்டுள்ளது. இன்று இரவு புல்டோசர்கள் மூலம் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டுள்ளது.

இதனை கேள்வியுற்ற யாழ் இளைஞர்கள் பல்கலைக்கழகத்துக்கு முன் ஓன்று கூடி  எதிர்ப்பினை வெளிக்காட்டிக்கொண்டுள்ளனர்.

பல்கலைக்கழக வளாக முன்றலுக்கு முன் இராணுவமம் பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு மாவைசேனாதிராஜா உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்களும் சென்றிருந்தனர்.

வீதியில் அமர்ந்து கொண்டு இளைஞர்கள் கோசங்களை எழுப்பினர்.

இராணுவம் உள்ளே மாணவர்கள் வெளியே

 உபவேந்தரிடம் துப்பாக்கி மாணவர்களிடம் அகிம்சை

செய்யாதே  செய்யாதே இனத்துரோகம் செய்யாதே

இடிக்காதே இடிக்காதே தமிழர்களின் இதயங்களை இடிக்காதே

என கோசங்களை எழுப்பியவண்ணம் உள்ளனர். இதேவேளை

யாழ்பல்கலைக்கழகத்திற்குள் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட கட்டடங்களை அகற்றியுள்ளேன் என யாழ் பல்கலைக்கழக உபவேந்தர் எஸ். ஸ்ரீசற்குணராஜா தெரிவித்துள்ளார்.

இது குறித்துஇலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளகண்டனத்தில்

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும்.”

– இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வெளியிட்டுள்ள கண்டனத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“யாழ். பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி அரசின் மேலிடத்தின் உத்தரவின் பிரகாரம் பல்கலைக்கழக நிர்வாகத்தால் இன்றிரவு இடித்தழிக்கப்பட்டுள்ளது.

பொலிஸாரும் இராணுவத்தினரும் பெரும் எண்ணிக்கையில் பல்கலைக்கழக வாயிலில் குவிக்கப்பட்டுப் பாதுகாப்பு வழங்க இந்த அருவருக்கத்தக்க – ஈனத்தமான செயல் அரங்கேறியுள்ளது.

தமிழினப் படுகொலையின் அடையாளமாக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி விளங்குகின்றது.இது இடித்து அழிக்கப்பட்டமை தமிழினத்தின் ஆன்மாவையே அழித்த மிகக் கொடூரமான செயலாகும்.

இந்த அராஜகத்தை இலங்கைத் தமிழரசுக் கட்சியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றது” – என்றார்.

பிந்திக்கிடைத்த தகவலின் அடிப்படையில்

யாழ்ப்பாண பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி இடித்தழிக்கப்பட்ட நிலையில் அதனை பார்வையிட பல்கலைக்கழகத்தினுள் நள்ளிரவு வேளை அத்துமீறி உள்நுழைய முனைந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் மாணவர்கள் இருவரும் யாழ்.பொலிஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்