மூதூரில் மேலும் நான்கு பேருக்கு தொற்று

Corona virus test kit - Swab sample for PCR DNA testing
பொன்ஆனந்தம்
மூதூர் பிரதேச செயலக பிரிவில் மேலும்  நான்கு பேர்  கொவிட் தொற்றாளர்களாக  இனம் காண ப்பட்டிருப்பதாக மூதூர் பொது ச்சுகாதார வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்-

கடந்த 2020.12.25ம் திகதியன்று தொற்றாளர்களாக இனங்கணாப்பட்ட  இரண்டு நபர்களின் தனிமைப்படுத்தப்பட்ட குடும்ப அங்கத்தவர்களுக்கு  கடந்த 2021.01.04ம் திகதி அன்று பெறப்பட்ட பிசிஆர் மாதிரிகளில் இந்நான்கு( 04) தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் மூதூர் மின்சார நிலைய வீதி மற்றும் தோப்பூர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும்  பொதுச்சுகாதார வைத்திய அதிகாரி என். எம். எம். கசாலி தெரிவித்தார்.
ஆகவே பொது மக்கள் மென் மேலும் தொடர்ச்சியாக சுகாதார நடைமுறைகளை பின்பற்றுமாறும்அவர்  கோரிக்கை விடுத்துள்ளார்.