கொரனாவுக்குப்பின் மட்டிலிருந்து சென்ற முதல் புகையிரதம் மோதியதில் ஒருவர்பலி.

ஏறாவூர் நிருபர்  நாஸர்)
மட்டக்களப்பு- எறாவூர்ப் பிரதேசத்தில் புகையிரதம் மோதியதில்                  58 வயதுடைய குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக     ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த     மட்டக்களப்பு ரெயில் சேவை                                   சுமார் இரண்டரை மாத காலத்தின் பின்னர்                        மீண்டும் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது ரெயில் வண்டியிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது மட்டக்களப்பிலிருந்து மாகோ வரை செல்லும்                ரெயில் வண்டியாகும்.
ஏறாவூரைச்சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான             கேஎம். ஜமால்தீன் என்பவரே இவ்விபத்தில் பலியானவர்.
இவர் வாய்பேசமுடியாத காது கேளாத  நபர் எனத்தெரிவிக்கப்படுகிறது.
இவர் ரெயில் பாதையை கடந்து செல்லும்போது                  அவரது கையிலிருந்து தவிறிவிழுந்த பொருள் ஒன்றை                    எடுக்க முட்பட்டவேளையில்  ரெயில் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் தலையில் ஏற்பட்ட பலத்த காயத்துடன்                    ஏறாவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு                பின்னர் மேலதிக சிகிச்சைக்காக                               மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு                    எடுத்துச் செல்லும் வழியில் மரணித்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஏறாவூர்ப் பொலிஸார் இதுகுறித்து                        விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.