குச்சவெளி தவிசாளரினால் ஹிஜ்ரா புர பகுதிக்கு வீதி மின்விளக்கு வழங்கி வைப்பு

எப்.முபாரக்
குச்சவெளி பிரதேச சபையின் ஜாயாநகர் வட்டாரத்தின் ஹிஜ்ரா புரம் செல்வதற்கான பகுதியில் வீதி மின்விளக்குகள் இல்லாத காரணத்தால் இரவு வேளைகளில் அப் பகுதிக்கு செல்கின்ற மக்கள் பல சிரமங்களை எதிர்கொள்வதாக அப் பகுதிக்கு பொறுப்பான  உறுப்பினர்  ஏ.சி.எம்.மீசான்  குச்சவெளி  தவிசாளரிடம் விடுத்த வேண்டுகோளுக்கமைய அவ் வட்டார பகுதியில் இதுவரை வீதி மின்விளக்கு பொறுத்தப்படாத இடங்களுக்கு பொறுத்துவதற்க்காக இன்று(7)வீதி மின் விளக்குகள் வழங்கி வைக்கப்பட்டன.

குச்சவெளி பிரதேச தவிசாளர்   ஏ.முபாறக் அவர்களால் வட்டார உறுப்பினர் சகிதம் பிரதேசவாசி ஒருவருக்கு  பிரதேச சபையின் அலுவலகத்தில்   வைத்து வீதி மின் விளக்குகள் வழங்கப்பட்டது.