சம்மாந்துறையில் டெங்கு நோயாளி ஒருவர் அடையாளம்

ஐ.எல்.எம் நாஸிம்
சம்மாந்துறை பிரதேச செயலக நிறுவாக பிரிவில்  உள்ள சம்மாந்துறை -07 வசிக்கும் 14 வயதுடைய பாடசாலை மாணவருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்
குறித்த மாணவருக்கு ஏற்பட்ட அதிக காய்ச்சல் காரணமாக சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக கடந்த 31ம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
அதனை தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட இரத்த மாதிரி பரிசோதனையின் பின் அவருக்கு டெங்கு காய்ச்சல் கடந்த 4 திகதி உறுதிசெய்யப்பட்டது.
அதற்கமைய சம்மாந்துறை சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.ஐ.எம் கபீர் அவரின் ஆலோசனைக்கமைய சுகாதார மேற்பார்வை பரிசோதகர் ஐ.எல் றாஸிக் தலைமையில் அவ்விடத்திற்கு சென்ற பொது  சுகாதார பரிசோதகர் குழு சம்மாந்துறை-07கிராம   சேவையாளர் பிரிவில் டெங்கு நோய் பரவக்கூடிய இடங்கள் பரிசோதனை செய்யப்பட்டு புகை விசிறல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.