கல்முனையில் தனிமைப்படுத்தபட்ட பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதி பெற்ற வியாபாரிகளின் விபரம்.

கேதீஸ்-

கல்முனை பிரதேசத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசத்தில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் விற்பனையில் ஈடுபடவுள்ள நடமாடும் வியாபாரிகளுக்கான PCR பரிசோதனைகள் சில தினங்களுக்கு முன்னர் கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையால் வைத்திய அதிகாரி கணேஸ்வரன் தலைமையில் மேற்கொள்ளப்பட்டன.

பரிசோதனை செய்யப்பட்ட வியாபாரிகளுக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பின்னர் அவர்களுக்கான  அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேற்படி அனுமதி வழங்கப்பட்ட பெயர் விபரங்களை கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் வெளியிட்டார்.