அதுரலிய தேரர் பாராளுமன்றத்தில் முதல் பேச்சே முஸ்லிம்களின் மதுரஸாக்களை பற்றியே! முஸம்மில் முகைதீன்

ஹஸ்பர் ஏ ஹலீம்_
அதுரலிய தேரர்   பாராளுமன்றத்தில் முதல் பேச்சே முஸ்லிம்களின் மதுரஸாக்களை பற்றியே!  இவரின் பேச்சில் இருந்து விளங்குவது எதிர்வரும் காலங்களில் மிகவும் முஸ்லிம்களின் இஸ்லாமிய  நடைமுறை வாழ்க்கையில் தலையிட்டு சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிங்களை பற்றி ஒரு சீரற்ற நிலையை ஏற்ப்படுத்துவார் என்பது.

அதுமட்டுமல்ல இவரின் பேச்சை அவதானிக்கும் போது ஞானசார தேரரை  விட இவர் ஒரு தீர்க்கம் இல்லாத பேச்சு என்பதும் தெரியவருகின்றது என தேசிய விடுதலை மக்கள் முண்ணனியின் தலைவர் முஸம்மில் முகைதீன் தெரிவித்தார். முள்ளிப்பொத்தானையில் உள்ள கட்சியின் பிரதான காரியாலயத்தில் இன்று (07)இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் தெரிவிக்கையில்
இவரை எதிர்த்து நின்று பேசும் அளவிற்கு எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் தயாராக வேண்டும் என நான் கண்டிப்பாக வேண்டுகிறேன். இல்லையேல் இவர் சிங்கள மக்கள் மத்தியில் அரங்கேற்றப்படுவார் என்பதில் ஐயமில்லை
மதுரஸாக்களிலும் உணவு உடைகளிலும் கை வைத்தே இவரின் கண்ணி உரையை ஆரம்பித்த அதுருலிய தேரர் இன்னும் எத்தனையோ அஜன்டாக்கை தயார் செய்து கொண்டுவருவார். இவர்களை தேர்ந்தெடுத்த சிங்கள் மக்களுக்கான நன்றிக் கடனாக இவர் நிறைய முஸ்லிம்களுக்கு எதிர்ப்பான செயல் முறைகளை அரங்கேற்ற ஏற்பாடுகள் செய்வார் என்பதிலும் சந்தேகம் இல்லை என்றார்.