எருக்கலம்பிட்டியில் 46 குடும்பங்கள் தனிமைப்படுத்தல்

????????????????????????????????????

பி.சி.ஆர். பரிசோதனையின் பின்பே முடக்கப்பட்டுள்ள எருக்கலம்பிட்டி விடுவிப்பு தெரிவிக்கப்படும்.
அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல்

( வாஸ் கூஞ்ஞ)

மன்னாரில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள எருக்கலம்பிட்டி கிராமத்தில் மேற்கொள்ளப்பட்;டுள்ள பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்ற பின்பே ,வ் கிராம விடயத்தில் அடுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அதுவரைக்கும் ,வ் கிராமம் தற்பொழுது உள்ள நிலையில் தற்காலிகமாக முடக்கி வைக்கப்படும் என மன்னார் மாவட்ட செயலகத்தில் ,துவிடயமாக நடைபெற்றக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் இவ்வாறு தெரிவித்தார்.

வெளி மாவட்டத்திலிருந்து மன்னார் எருக்கலம்பிட்டி கிராமத்;துக்கு வந்த குடும்பத்தினரில் ஐந்து பேருக்;கு கொரோனா 19 தொற்றுநோய் ,ருக்க கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து ,வ் கிராமத்தின் ஐந்து கிராம அலுவலகர் பிரிவுகள் தற்பொழுது தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்;பட்டுள்;ளன.

,தைத் தொடர்ந்து ,து விடயமாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஸ்ரான்;லி டீமெல் தலைமையில் புதன்கிழமை (06.01.2021) பிற்பகல் மன்னார் மாவட்ட செயலகத்தில் விஷேட கலந்துரையாடல் ,டம்பெற்றது. ,து சம்பந்தமாக அரச அதிபர் திருமதி ஸ்ரான்லி டீமெல் தெரிவிக்கையில் புதன் கிழமை (06) நான்கு மணிவரை எருக்கலம்பிட்டி கிராமத்தில் 200 பேருக்கு பி.சி.ஆர். எடுக்கப்பட்டுள்ளதாகவும் ,தன் முடிவுகள் ஓரிரு தினங்களுக்குள் வந்தபின்  கிராமம் தொடர்பாக அடுத்த நடவடிக்கை எடுப்பதைப்பற்றி தீர்மானிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது எனவும்

அத்துடன் இவ் கிராமத்தில்  கொரோனா தொற்றாளிகளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற ரீதியில் 46 குடும்பங்கள் தங்கள் இல்லங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும்  46 குடும்பங்களும் வெளிவர முடியாத நிலையில் வைக்கப்பட்டுள்ளதால் இவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை வழங்குவதற்கான ஏற்பாடுகள் மன்னார் பிரதேச செயலகத்தினூடக மேற்கொள்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுளளது எனவும்  கிராமத்தில் உள்ள ஏனையவர்கள் அக் கிராம கடைகளில் பொருட்களை  கொள்முதல் செய்வதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதே தினம் புதன்கிழமை (06) மன்னார் பிரதான பேரூந்து நிலையத்தில் பரவலாக 200 பேர் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.