GMOA விற்கு பொதுத்தேர்தலில் இடம் வழங்கினோம் .

உண்மையைச்சொன்ன பசில்

கடந்த பொதுத் தேர்தலில்  பொதுஜன பெரமுனவினால் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்திற்கு இடங்கள் வழங்கப்பட்டன என்று கட்சியின் நிறுவனர் மற்றும் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.  கடந்த4 ஆம் தேதி  தொலைக்காட்சி நிகழ்வொன்றில் பொதுஜன பெரமுனவின் அரசியல் நடவடிக்கைகளில் GMOA தலைவர்கள் ஈடுபட்டுள்ளனர் என்பதை பசில் ராஜபக்ஷ வெளிப்படுத்தியிருப்பது இதுவே முதல் முறை.

கடந்த காலங்களில் மருத்துவ நிபுணர்களின் தொழில் உரிமைகளுக்காக வாதிட்ட ஒரு பக்கச்சார்பற்ற அமைப்பான அரசு மருத்துவ அதிகாரிகள் சங்கம் கடந்த சில ஆண்டுகளாக பெரிதும் அரசியல் மயப்படுத்தப்பட்டுள்ளது என்ற கருத்து தற்போது வைக்கப்பட்டுள்ளது.