கோவிட் தடுப்பூசியை இந்தியாவிலிருந்து பெறவுள்ள இலங்கை

கோவிட் -19 தடுப்பூசியை இந்தியாவில் இருந்து பெற இலங்கை ஒப்புக் கொண்டுள்ளது என இந்திய வெளியுறவு அமைச்சர் டாக்டர்.எஸ்.  ஜெயசங்கர் தெரிவித்தார்.

திரு. ஜெயசங்கர் வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடன் கூட்டு ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான கடல்சார் பிரச்சினைகள் குறித்தும் இரு தரப்பினரும் விவாதித்தனர்.