மருதமுனை அல்-ஹிக்மா ஜூனியர் பாடசாலை மாணவர்களுக்கு இலவச உலர்உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)     

கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட மருதமுனை அல்- ஹிக்மா ஜூனியர் பாடசாலை மாணவர்களுக்கு உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (06.01.2021) பாடசாலையின் அதிபர் எம்.எல்.ஏ.மஹ்றூப் தலைமையில் நடைபெற்றது.

மகளிர் மற்றுமு; சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக்கல்வி, கல்விச்சேவைகள் மற்றும் பாடசாலைகள் உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சின் ‘பாடசாலை மாணவர்களுக்கு உணவு வழங்கும்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இந்த உலர் உணவுப் பொதிகள் வழங்கிவைக்கப்பட்டன.

சுகாதார சட்ட விதிமுறைகளுக்கமைய மாணவர்களின் பெற்றோர்கள் கட்டம் கட்டமாக பாடசாலைக்கு அழைக்கப்பட்டு உணவுப் பொதிகள் வழங்கப்பட்டன.
இதில் பாடசாலையின் வகுப்பு ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.