தளவாய்க்கிராமத்துக்குள் ஏறாவூரில் வெட்டப்படும் மாடுகள் கோழிகளின் கழிவுகள்

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள தளவாய்க்கிராமத்துக்குள் ஏறாவூரில் வெட்டப்படும் மாடுகள் கோழிகளின் கழிவுகளை இரவோடு இரவாக கொண்டு வீசிச்செல்வதாக அப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

கண்ணகியம்மன் கோயில் வீதிக்கு அண்மையில் அமைந்துள்ள தோணா ஓரத்திலேயே இக்கழிவுகள் வீசப்படுகின்றன. இதனால் பிரதேசத்தில் துர்நாற்றம் வீசுவதுடன் தோனாவும் அடைபட்டு நீர் ஓடுவதும் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது விடயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் கவனமெடுத்து கழிவுகள் வீசுவதை தடைசெய்ய நடவடிக்கையெடுக்கவேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.