களுவாஞ்சிக்குடியில் சுகாதார நடமுறைகளை பின்பற்றி நடக்காதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை.

சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.இராஜேந்திரன்

(கமல்)

சுகாதார நடமுறைகளை பின்பற்றி நடக்காதவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என  களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி எஸ்.இராஜேந்திரன் அவர்கள் தெரிவித்தார்.

களுவாஞ்சிகுடி பிரதேச  சுகாதார வைத்திய அதிகாரியாக புதிதாக  கடமையேற்றுள்ள வைத்திய அதிகாரியிடம் முன்னெடுக்கப்படும் கொரணா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக வினாவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்.
மக்கள் இன்னமும் சுகாதார நடமுறைகளை பின்பற்றி செயற்படுவதாக தெரியவில்லை இந் நிலமை தொடர்ந்தால் இந்த கொரணா தொற்றிலிருந்து நாங்கள் மீளமுடியாது. தற்பொழுது எமது பிரதேத்தினுள்ளும் தொற்றானது ஊடுருவி வருகின்றது. இதனை நாங்கள் ருத்திற்கொண்டு செயற்படவேண்டும் ஓரிருவரின் செயற்பாட்டுகளினால் ஏனையவர்களை நாங்கள் பலிக்கிடாவாக்க முடியாது. களுவாஞ்சிகுடி நகர்பகுதியில் உள்ள கடைகளை அவதானிக்கின்றபோது. முகக்கவசமின்றியும், முகக்கவசத்தை   ஒழுங்காக அணியாமலும் சமூக இடைவெளிகளை பின்பற்றாமலும் பொருள் கொள்வனவுகளில் ஈடுபடுவதனை நான் நேரடியாக அவதானித்தேன். இந்நிலமையை மாற்றியமைக்க வேண்டும். தற்பொழுது எமது சுகாதார பிரிவில் அங்காங்கே தொற்றுக்கள் இனங்காணப்பட்டுள்ளது. இந் நிலமையை தொடரவிட முடியாது. இதனை எவ்வாறாயினும் கட்டுப்படுத்தி எமது மக்களை இந் நோயிலிருந்தி காப்பாற்றவேண்டும் எனவே எமது செற்பாடுகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். எனவேதான் எதிர்வருங்காலங்களில் மக்களின் நலனை கருத்திற்கொண்டு குறித்த சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்தார்….