திருகோணமலை ஜமாலியப்பகுதி ஞாயிற்றுக்கிழமை யுடன் முடக்கப்பட்டு இரண்டுவாரங்கள் நிறைவடைந்துள்ளது

பொன்ஆனந்தம்
திருகோணமலையில் கொரோனா இரண்டாவது அலை ஆரம்பித்ததில் இருந்து பலகிராமங்கள் தொடர்ந்து முடக்கப்பட்டநிலையில் உள்ளது
இதனடிப்படையில் திருகோணமலை ஜமாலியப்பகுதி இன்று ஞாயிற்றுக்கிழமை யுடன் முடக்கப்பட்டு இரண்டுவாரங்கள் நிறைவடைந்துள்ளது. எவரும் தொழில் நடவடிக்கை யில் ஈடுபட அனுமதி க்கப்படவில்லை என மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதேவேளை புதுவருடத்தினத்தில்
திருகோணமலை மத்திய வீதியில் கொரொணா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து குறித்த வீதியானது முடக்கப்பட்டுள்ளது. 

திருகோணலை நகர் பகுதியில் எளுமாற்றாக நடாத்தப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், புதுவருடதினம் ஒருவருக்கு தோற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து குறித்த கடை தொகுதிகளில் பணி புரியும் வேலை ஆட்களுக்கு ஆன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த பரிசோதனையில் மேலும் சிலருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து மத்திய வீதி ஆனது மணிக்கூட்டு கோபுர சந்தியில் இருந்து சம்பத் வங்கி சந்தி வரை மூடப்பட்டுள்ளது.
பொலிசாரும் ராணுவத்தினரும் பாதுகாப்பு கடமைகளுக்காக குறித்த பகுதியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.
மேலும் முடக்கப்படாத பகுதிகளிலும் மக்கள் நடமாட்டம் குறைவாக இருப்பதை அவதானிக்கக்கூடியதாக இருக்கிறது.