காரைதீவில் புத்தாண்டு உறுதியுரை சத்தியப்பிரமாணம்

வி.ரி.சகாதேவராஜா

புத்தாண்டில் அரச காரியாலயங்களில் உத்தியோகத்தர்களின் புத்தாண்டு உறுதியுரை சத்தியப்பிரமாணம் எடுக்கும் நிகழ்வு இன்று(1)வெள்ளிக்கிழமை பரவலாக நடைபெற்றது.


காரைதீவு பிரதேசசபை உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் புத்தாண்டு உறுதியுரை வாசித்து சத்தியபிரமாணம் எடுக்கும் நிகழ்வு தவிசாளர் கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் முன்னிலையில் நடைபெற்றது.
முன்னதாக பிரதேசசபை வளாகத்தில் தேசியக்கொடியை தவிசாளர் கி.ஜெயசிறிலும் சபைக்கொடியை சபையின் செயலாளர் அ.சுந்தரகுமாரும் ஏற்றினர்.தேசியகீதம் இசைக்கப்பட்டது.

சபை உத்தியோகத்தர்கள் கையை நீட்டி தவிசாளர் கி.ஜெயசிறில் முன்னிலையில் உறுதியுரையை வாசித்து சத்தியப்பிரமாணம் எடுத்தனர்.

நாட்டிற்காக உயிர்நீத்தவர்களுக்கு2நிமிடநேரம் மௌனாஞ்சலி நிகழ்த்தப்பட்டது.பின்னர் தவிசாளார் புதுவருட விசேட உரைநிகழ்த்தினார்.

பின்னர்  புத்தாண்டு பிறந்ததையொட்டி பிறந்ததினகேக் தவிசாளரால் வெட்டப்பட்டு பகிரப்பட்டது. பின்பு கைவிசேசமும் தவிசாளரால் வழங்கப்பட்டது.