ஹஸ்பர் ஏ ஹலீம்_
2021 ஆம் ஆண்டின் கடமைச் செயற்பாடுகளை ஆரம்பிக்கும் முதலாம் நாளாகிய இன்று (01)தம்பலகாமம் பிரதேச செயலகம் மக்களின் எதிர்பார்ப்புக்களை நிறைவேற்றும் புதுவருடமொன்றின் ஆரம்பத்தை இன்று கொண்டாடப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜே.ஸ்ரீபதி அவர்களின் தலைமையில் தேசிய கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய இந்நிகழ்வில் தேசத்திற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் அனைவரையும் நினைவுகூர்வதற்காக 2 நிமிட மௌன அஞ்சலியும் , அரசசேவை சத்தியப்பிரமாணம் வாசிப்பும் இடம்பெற்றதுடன் சர்வமத ஆசிர்வாதத்துடன் அனைவருக்கும் இனிப்பு பண்டங்களும் பகிர்ந்து கொள்ளப்பட்டது.