நிந்தவூர் பிரதேச செயலக அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப் பிரமான நிகழ்வு

(யாக்கூப் பஹாத்)
2021 ஆம் ஆண்டின் அரச சேவையை ஆரம்பிக்கும் ஆரம்ப தினமாகிய இன்றைய நாளில் அரச ஊழியர்களின் அரச சேவை உறுதியுரை எடுக்கும் சத்தியப் பிரமான நிகழ்வு இன்று (01.01.2021)  நிந்தவூர் பிரதேச செயலக வளாகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வுகள் காலை 9 மணியளவில் பிரதேச செயலாளர் TMM அன்ஷார் அவர்களின் தலைமையில் தேசியக் கொடி ஏற்றி தேசிய கீதம் இசைத்து ஆரம்பித்து வைக்கப்பட்டது. பின்னர் நாட்டுக்காக உயிரிழந்தவர்களுக்கு 2 நிமிட அமைதி காத்தல் நிகழ்வு இடம்பெற்றது.
”நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் கொள்கைப் பிரகடனத்துக்கு அமைவாக, பயனுள்ள பிரசை, மகிழ்ச்சியான குடும்பம், பண்பாடான, ஒழுக்கமுள்ள நீதியான சமுதாயம், சுபீட்சமான தேசம் என்ற நான்கு  குறிக்கோள்களை வெற்றி கொள்ளும் வகையில் பொதுமக்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதென்று ஊழியர்கள் அனைவரும் உறுதியுரை எடுத்துக் கொண்டார்கள்.
அதனை அடுத்து கொவிட் 19 வைரஸ் பரவுவதை தடுக்கும் செயற்பாடுகள் குறித்து சுகாதார வைத்திய அதிகாரி Dr. தஸ்லீமா பஸீர் அவர்களால் தெளிவுபடுத்தப்பட்டது. பின்னர் பிரதேச செயலாளர் TMM அன்ஷார் அவர்களின் உரையுடன் இனிப்புகள் பரிமாறப்பட்டு நிகழ்வுகள் இனிதே நிறைவு பெற்றன